நாம் இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை "தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடுகின்றோம்".
மருத்துவர் “பிதான் சந்திர ராய்” நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இவர் வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும், மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமாக இருந்தார். 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார்.
இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் "தேசிய மருத்துவர்கள் நாள்" இந்தியாவில் கொண்டாடப்படுகிறது