இயற்கையின் வழியில் மனிதப் பயணம்

post img

1,60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த “டெனிசோவான்ஸ்” மனித இனத்தை சேர்ந்வரின் தாடை

பயணம்-5

இயற்கை குறித்தான எனது பார்வையையும் அதன் மீது ஆதிமனிதன் கொண்டு இருந்த பற்றும் நாகரிகம் வளர்ந்த மனிதன் செய்த தவறுகளையும் தொடர்ந்து எழுதி வந்தேன்... அதன் தொடர்ச்சியாக மனிதனின் அறிவு வளர்ச்சி எவ்வாறு இந்த இயற்கையின் குணநலன்களையும் அதன் போக்கையும் மாற்றியது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்...

ஆதிமனிதன் தன் இனத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல எப்போதும் சிந்தித்து கொண்டே தான் இருந்தான். அந்த அறிவு தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் தன்னை எதிரியாக நினைத்து தன் இடத்தை அபகரிக்க வரும் எதிராளியான சக மனிதனிடம் இருந்து தன் வளங்களையும், மனிதர்களையும் காப்பதற்கும், கொல்லும் விலங்களிடம் தற்காத்துக் கொள்வதற்குமே அதிகம் பயன்படுத்தினான்..

அந்த குணம் இன்று வரையில் நம்மிடம் அப்படியே தான் இருக்கிறது சிறுதளவும் அதில் எந்த ஒரு மாற்றமும் இன்றி நம்மிடையே பரவி கிடக்கிறது. இப்போதும் நாம் நம் அறிவு வளர்ச்சியை வைத்து நம்மை பாதுகாக்க நம் வளங்களை பாதுகாக்க உலக நாடுகளுடன் போராடி கொண்டு தான் வருகிறோம் அதே போல தான் ஆதி மனிதனும் செய்தான், அது ஒரு நீண்ட வரலாறு அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த உலகம் உருவாகி பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு தோன்றியது தான், சிறு உயிர்கள் அதன் பின் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனித இனம் தோன்றியது. நம்மை போல பல மனித இனங்கள் தோன்றி இருக்கிறது. அவர்கள் பல்வேறு இடங்களில் பரவி கிடந்தார்கள் ஆனால், அவர்கள் காலபோக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்து போனார்கள், அல்லது பிற இடங்களுடன் கலந்தும் தன் இனத்தை இழந்து போனார்கள்.. ஆனால் இப்போது மனிதன் என்று சொல்ல கூடிய ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனம் மட்டும் இன்று வரை நிலைத்து நிற்கிறான் என்றால் அதற்கு காரணமே அவனின் அறிவு புரட்சி, வேளான் புரட்சி, அறிவியல் புரட்சி தான். நம்மை போன்ற இனங்கள் யாவும் முற்றிலும் அழிந்து போனாலும் நம் இனம் மட்டும் இந்த புவியில் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு காரணமே “அறிவு வளர்ச்சி” பெற்றதது தான்.

அந்த அறிவை கொண்டு அவன் தன் இனத்தை அனைத்து வித ஆபத்துகளில் இருந்து காப்பாற்றினான், சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டான் காட்டையும் அதன் சூழலையும் மிக எளிதாக உணர்ந்து தெரிந்து கொண்டான். உணவை மிக எளிதாக தேடி தேடி கண்டறிந்து அதனை பத்திரப்படுத்தி வைத்து கொண்டான். எறும்புகளை போல மனிதனும் உணவு கிடைத்தவுடன் அதனை உண்ணாமல் தனது எதிர்கால தேவைக்கு ஏற்ப அதனை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தான்.

இத்தகைய சேமிப்பு பழக்கம் இல்லாமையாலும் தங்களை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளாமல் இருந்தமையாலும் தான் பல்வேறு மனித இனங்கள் பூண்டோடு அழிந்து போயினர்.

மனித இனம் முதல் முதலில் தோன்றிய இடமாக கருதப்படும் ‘ஆப்ரிக்கா’ வில் இருந்து அவன் உலகம் முழுவதும் பரவி இருக்கிறான் என்றால், பனி அதிகமாக இருக்கும் வட துருவ பகுதிகளிலும், வெப்ப மண்டல பகுதிகளிலும் அவன் எப்படி தன்னை தகவமைத்துக் கொண்டான் என்றால் அதற்கு காரணமே அவனின் அறிவு என்பது மிகையாகாது.

உலகம் முழுவதும் பரவி கிடப்பது ஒரே இனம் தான் என்றால், அது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி தான். நாம் இவ்வளவு பெரிய வளர்ச்சியை நாம் அடைந்து இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே, நம் மனிதர்களின் மூளை தான். இப்போது வரை இந்த உலகை ஆட்டி படைப்பதே அறிவார்ந்தவர்கள் தான் என்பதும் அவர்களே மிகப்பெரிய அழிவுக்கும் காரணம் என்பதற்கு சிறந்த உதாரணம். அணுவை பிளந்து அதன் ஆற்றலை கொண்டு, அணு குண்டை தயாரிக்க முடியும் என்பதை கண்டறிந்தோம். அதே வேலையில் இன்று வரையில் உலகை அச்சுறுத்திக் கொண்டு இருப்பதே, அணுவின் சக்தியை பயன்படுத்தும் நாடுகளை பார்த்து தான்.

மனிதன் தன் இனத்தை பாதுகாக்க, தன் அறிவை பயன்படுத்தியவன் மெதுவாக இயற்கையின் நியதிகளில் இருந்து வெளியே வர ஆரம்பித்தான், காரணம் “தன்னால் எல்லாமே முடியும்” என்ற நம்பிக்கையில் அவன் அப்படி நினைக்க ஆரம்பித்த நொடியில் இருந்து, இயற்கைக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தான். தன் அறிவை கொண்டு தன்னால் காக்க முடியும், அழிக்க முடியும் ஏன் புதியதாக ஒரு உலகத்தை படைக்க முடியும் என தவறான கற்பிதங்களை அவனின் அறிவு அவனுக்கு கற்று கொடுத்து, இயற்கைக்கு எதிராக அவனை நிறுத்தியது.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் காடுகளை அழித்து அங்கு, வேளாண்மையில் இறங்கினான். உணவுகளை சேகரித்து வந்தவன், தானே உணவை உற்பத்தி செய்ய அவனின் அறிவு வளர்ச்சி உதவியது காடுகள் அழிக்கப்பட்டது. காடுகளில் கிடைக்கும் உணவுகளை கொண்டு தன் இன மக்களை காக்கும் அளவிற்கு இல்லாமல் இருந்ததாலும் எதிரிகளிடம் பறி கொடுத்த உணவுகளையும், இடங்களையும் தான் மீண்டும் பெறவும் தனக்கான ஒரு வாழ்விடங்களை அமைக்கவும், அவன் தொடர்ந்து காடுகளை அழிக்க ஆரம்பித்தான். அது இன்று வரை தொடர்கிறது.

மனிதனின் அறிவு வளர்ச்சி, மிக பெரிய அளவில் அவனை வேளாண் வளர்ச்சிக்கு கொண்டு சேர்த்தது. இதன் தொடர்ச்சியாக வேளாண் வளர்ச்சிக்கும், தன்னுடைய தேவைகளுக்கும் காட்டில் வாழ்ந்த விலங்குகளை பழக்கினான். தன் வேளாண் வளர்ச்சிக்கு இயற்கையின் தயவுகள் தேவை என்பதால், சூரியனை பயபக்தியுடன் வணங்கி வந்தான் மேலும், விலங்குகளுக்கு நன்றி செய்யும் பொருட்டும் அதனையும் வணங்க ஆரம்பித்தான். அதற்காக வருடா வருடம் விழா எடுத்தான்.

மனிதன் இயற்கையை வணங்க காரணம் இயற்கையின் மீதான பயம் மட்டும் இல்லை, தன் வளர்ச்சிக்கு ஏதேனும் பங்கம் வந்துவிட கூடாது என்ற எண்ணமும் தான். மற்றொரு காரணமும் உண்டு அது தன் மூதாதையரின் தொடர்ச்சி. மனிதன் எப்பொழுது தன் தேவைக்காக மட்டுமே, வணங்க ஆரம்பித்தானோ அன்றிலிருந்து பல்வேறு சிக்கல்களை இயற்கைக்கு ஏற்படுத்தினான்.

மனதின் அறிவு வளர்ச்சி எவ்வாறு தொடர்ந்து இந்த இயற்கைக்கு கேடு விழைவித்தது என்பதையும், கடவுள் வழிபாடு எப்படி திசைமாறியது என்பதையும் வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Read All Articles

Contact

இயற்கை வழிபாடு பற்றி அறிந்து கொள்ள எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Call:

+91 949 992 1471

சகமனிதன் ஒன்றுபட, சமத்துவ வழிபாடான இயற்கை வழிபாடே அவசியம். பிரிவுகள் இல்லா, பிளவுகள் இல்லா, வழிபாட்டுதள முரண் இல்லா, வழிபாட்டு நுழைவு மறுப்பு இல்லா, அமைதியான வாழ்க்கை முறைக்கும்... கொண்டாட்டமான மனநிலையை அடையவும்... மனநிறைவு பெறவும், "இயற்கை வழிபாடே" சிறந்த வழி... மனிதம் ஒன்றுபட்டு மகிழவும் & இயற்கையை சிதைக்காமல் இன்புற்று வாழவும் இணைவோம் வாருங்கள்...

Title Goes Here

Close