இயற்கையின் வழியில் மனித பயணம்: 6

post img

அறிவு வளர்ச்சியும் அதன் தாக்கமும்

மனிதனின் அறிவு வளர்ச்சி எவ்வாறு இந்த உலகில் பல மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த பகுதியில் நாம் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியாக மனிதனின் அறிவு வளர்ச்சி பல்வேறு காலகட்டங்களில் எவ்வாறு மாறுதல்களை அடைந்தது என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்.

இந்த உலகம் உருவானதில் இருந்து இந்த பூமியில் பல்வேறு உயிரனங்கள் உருவாகி இருந்தது அதற்கான கால சூழ்நிலைக்கு ஏற்ப அவைகள் வாழ்ந்து வந்தன. ஒருகட்டத்தில் நம் பூமியில் நிலவும் கால சூழ்நிலை மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அந்த சூழ்நிலையை சமாளிக்கும் திறன் இல்லாத உயிரனங்கள் அழிந்து போயின. பரிணாமங்கள் மாறி சூழலை சமாளிக்க திறன் பெற்ற உயிரினங்கள் தான் இன்றும் பூமியில் நிலைபெற்று உள்ளன.

ஒரே வகை இனமாக இருந்தாலும் நம் காடுகளில் வாழும் விலங்குகளும் பனி படர்ந்த வனத்தில் இருக்கும் விலங்குகளும் வெவ்வேறு தன்மைகளைப் பெற்று இருக்கின்றன. அதற்கு காரணம் அங்கு நிலவும் சூழலுக்கேற்ப, நிலத்தின் தன்மைகளுக்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக் கொண்டு விட்டன. தன்னை மாற்றி கொள்ளும் தகுதிவாய்ந்த உயிரனங்கள் தான்... வாழும் திறனை அடைகிறது.

மனித இனமும் அதே போல தான், நிலங்களை பொறுத்து தான்... மனிதர்களின் நிறம், உடல்வாகு, வாழ்கைமுறை என அனைத்தும் அந்த நிலத்தில் நிலவும் சூழலுக்கேற்ப மனித இனம் தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. கடந்த பகுதியில் சொன்னது போல், மனிதன் பல இனங்களாக இருந்து, அவைகள் எல்லாம் காலபோக்கில் அழிந்து போனாலும் இப்போது இருக்கும் நம் இனம் மட்டும் நிலைத்து நிற்பதற்கு காரணம் மூளை திறன் கொண்ட அறிவார்ந்த இனம் என்பதால் தான்.

மனிதனின் அறிவு வளர்ச்சி அளவற்றதாக இருந்தாலும் இயற்கை அதற்கும் ஒரு எல்லை வகுத்திருக்கிறது. அதற்கு காரணம் ஒவ்வொரு உயிர்களும் இந்த மண்ணில் உருவான பொழுதில் இருந்து அதற்கு என ஒரு தனி திறனுடன் தான் உருவாகிறது. பூனை குடும்பமே மரம் ஏறினாலும் நரி, ஒநாய் குடும்பங்களால் ஏற முடியாது என்பது போல, ஆமை தான் முட்டை வைத்ததும் அதை பற்றி கண்டு கொள்ளாமல், அதை மண்ணிட்டு மூடி வைத்து விட்டு கடலுக்குள் சென்று விடுகிறது. தானாக முட்டையில் இருந்து வெளியே வந்த ஆமை குட்டிகளும் கடலை நோக்கி பிறந்தவுடனே நடந்து செல்கிறது, ஆனால் முதலை குட்டிகளுக்கு அந்த வலிமை இருப்பது இல்லை. யானை ஆடு, மாடு என அதன் குட்டிகள் பிறந்த அடுத்த நொடி எழுந்து நடக்க… ஏன் ஓட கூட ஆரம்பிக்கும், அதே சமயம் கொல்லும் உயிர்களின் குட்டிகள் வளர்ந்து தனியாக வேட்டையாடும் திறன் வரும் வரை தாயின் பாது காப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை.

இதே நிலை இவ்வளவு அறிவு திறன் வாய்ந்த மனிதனிடமும் நிலவுகிறது. தன் குழந்தை பிறந்து ஆறு வருடங்கள் தாய் தந்தை அதனை பாதுகாத்து தானே ஆக வேண்டும்.?! காரணம் மனிதனின் செயல்பாடுகள் பிறந்த நொடியில் இருந்து ஆரம்பித்தால் இந்த உலகில் பிற உயிரனங்கள் வாழ இயலாது போல என்பதால் தான் இத்தகைய ஒரு நெருக்கடியான நிலையை அனைத்து உயிரனங்களுக்கும் இந்த இயற்கை கொடுத்து இருக்கிறது. அறிவார்ந்த சமூகத்தில் ஒரு சிலர் இந்த இயற்கையை எந்த அளவிற்கு தன் சுயநலத்திற்காக மாற்றியும் அழித்தும் வருகிறார்கள் இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது என்பது தானே உண்மை.

இயற்கையின் நியதி படி வாழ்ந்து வந்த மனிதன் அதனை முன்னேறி செல்ல வேண்டும் என நினைத்தது தான் மனிதனின் அறிவு வளர்ச்சி செய்த முதன்மையான தவறு. அப்படி மனிதன் விலகி சென்றமையால் இவ்வுலகில் பாதிக்கும் மேற்பட்ட அறிவார்ந்த சக இனம் செய்வதறியாமல் தவிக்கிறார்கள்.

மனித குலமே இயற்கையின் கீழ் அதனுடைய அனைத்து வளங்களையும் அதற் அனுமதி பெற்றே தான் பயன்படுத்த வேண்டும் என்பது தான் முன்னோர்களின் எண்ணம். வேளாண் நிலத்தில் பயிரிடும் பொழுது கூட பிற உயிரனங்கள் சாப்பிட்ட பிறகு தான் மீதமுள்ளவற்றை மனிதர்கள் பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஆனால் அதனை அறிவு வளர்ச்சியினால் பிற உயிரனங்கள் வந்து சாப்பிடும் விருந்தோம்பல் பண்பு இல்லாமல் முற்றிலும் சிதைந்து போய் மனித இனமே நஞ்சான உணவை சாப்பிட்டு வருகிறார்கள்...

மனிதனின் அறிவு வளர்ச்சி குறித்து இன்னும் விரிவாக அடுத்த பகுதியில் காணலாம்.

Read All Articles

Contact

இயற்கை வழிபாடு பற்றி அறிந்து கொள்ள எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Call:

+91 949 992 1471

சகமனிதன் ஒன்றுபட, சமத்துவ வழிபாடான இயற்கை வழிபாடே அவசியம். பிரிவுகள் இல்லா, பிளவுகள் இல்லா, வழிபாட்டுதள முரண் இல்லா, வழிபாட்டு நுழைவு மறுப்பு இல்லா, அமைதியான வாழ்க்கை முறைக்கும்... கொண்டாட்டமான மனநிலையை அடையவும்... மனநிறைவு பெறவும், "இயற்கை வழிபாடே" சிறந்த வழி... மனிதம் ஒன்றுபட்டு மகிழவும் & இயற்கையை சிதைக்காமல் இன்புற்று வாழவும் இணைவோம் வாருங்கள்...

Title Goes Here

Close