பயணம்-4
இயற்கை சார்ந்த கட்டுரையை எழுதி கொண்டு இருக்கும் முன்பு இருந்த சூழலை விட தற்போது நாம் ஏன் இயற்கையின் வழி செல்ல வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தி இருக்கிறது.
இயற்கையின் நியதி படி வாழ்ந்த நம் இனம் என்றைக்கு அதன் வழியை மாற்றி வேறு வழியில் சென்றதோ அன்றிலிருந்து இன்று வரை நம் இனம் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நம் சமூகம் எதையுமே ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
எல்லாவற்றையும் தன்னகத்தே எடுத்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு கொண்டே தான் இருக்கிறது...
இந்த உலகில் மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய உயிரனங்கள் பலவும் காலபோக்கில் உயிரியல் மாற்றத்தால் அழிந்தும், உருமாறியும் போய் இருக்கிறது... பாலைவனங்கள் கூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்தது தான்.. உலகம் தோன்றிய பொழுது இருந்த நிலப்பரப்பு வேறு இப்போது உள்ள நிலப்பரப்பு வேறு... கண்டங்கள் நகர்ந்து கொண்டே தான் இருந்து இருக்கின்றன. அதற்கு ஏற்றால் போல் உலகில் பல மாறுதல்கள் நடந்து கொண்டே இருந்தது.
தற்போது கூட கடலுக்கு அடியில் பல ஊர்கள் மூழ்கி கிடக்கிறது என்ற வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பூம்புகார் என்ற ஊர் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் என்ற நாவலில் வரும் அந்த ஊரும் கடலுக்குள் சென்று விட்டது என்பது இன்று வரையில் சொல்லி வருகிறார்கள் அதை விட நிகழ் காலத்தில் மகாபலிபுரம் பகுதியில் இன்னமும் பல பல்லவ கால கோவில்கள் கடலுக்குள் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்கு மட்டும் அல்ல வட நாட்டில் ஒரு கிருஷ்ணன் கோவில் கடலின் உள்ளே இருக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் இயற்கையாக கடல் நீர் உள் வாங்கும் பொழுது மட்டும் அங்கு சென்று வணங்கி வருவார்கள். இவையனைத்தும் உலகம் தன் உருவத்தை மாற்றி கொண்டே வருவதற்கான சாத்தியக்கூறுகள்.
இப்பொழுதும் கூட ஆப்பிரிக்காவில் வாழும் மனிதனுக்கும் நம் தமிழ் பூமியில் வசிக்கும் மக்களுக்கும் எதோ ஒரு ஆதி தொடர்பு இருப்பது வரலாற்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பூலோக அடிப்படையில் ஆப்பிரிக்க கண்டம் நம்மோடு ஒன்றாக இருந்ததாகவும் அது பிரிந்து சென்றதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகத்தில் மாறுதல்கள் பல ஏற்பட்டாலும் மனிதனின் எதாவது ஒரு செயலில் பழைமையான சுவடுகள் இருந்து கொண்டே தான் இருக்கும் அதில் எந்த ஒரு சிறு மாற்றம் கூட இல்லை. அதனால் தான் பல நூற்றாண்டு முன்னாடி பிரிந்த பிரிந்த கண்டங்கள் என்றாலும் மனிதன் சுவடுகள் இன்னமும் மாறாமல் ஒரே மாதிரி இருக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி.
இந்த உலகில் டைனோசர்கள் தொடங்கி இன்று இருக்கும் உயிரினங்கள் பலவும் தங்களின் உருவங்களை தகவமைத்துக் கொண்டே தான் இருக்கிறது. அதே போல தான் குரங்கின் வகையை சார்ந்த நம் இனம் படி படியாக வனத்தில் இருந்து தங்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள தன்னை உருமாற்றம் செய்து கொண்டது. மனிதன் தோன்றுவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தான் இந்த பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் தான். அவைகள் தான் இந்த பூமியில் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை வடிவமைப்பு செய்து கொள்கிறது. அதனால் தான் அவைகளால் தொடர்ந்து இந்த பூமியில் மனிதனின் ஆதிக்கம் புரிந்தாலும் இருக்க முடிகிறது.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் நம் மனித இனம் விலங்குகளை போல கூட்டமாக வாழுவதை போல தான் முதலில் வாழ்ந்தான், உணவின் தேவைக்காக பிற விலங்குகளை வேட்டையாடி அதனை பச்சையாகவே உண்டு வந்தவன் எப்படி அதனை வேகவைத்து தின்றால் ருசி மிகுந்து இருக்கும் என்பதை கண்டறிந்தான் என்பதற்கு பல வித காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு காரணமாக இருக்க கூடும் காட்டில் எதாவது ஒரு தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் அதில் சிக்கி இறந்த விலங்குகளை மனிதன் தின்று இருப்பான். அதை தொடர்ந்து தான் இறைச்சியை வேக வைத்து தின்றால் தான் ருசி இருக்கும் என்பதை உணர்ந்து இருப்பான்.
மனிதன் தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள காட்டில் இருந்து சிறிது சிறிதாக தன் இடத்தை விரிவுபடுத்தினான்.கூட்டாக ஒரே இனமாக சிறு சிறு குழுவாக பிரிந்து தன் உணவு தேவைக்கு மட்டும் வேட்டையாடி அதனை சேமித்து வைத்தவன் அதை மட்டுமே நம்பி கொண்டு இல்லாமல் காட்டில் கிடைக்கும் உண்ண தகுந்த எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டான். தங்களின் இனத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்லும் வேளையில் அவன் சிறு சிறு குழுவாக பிரிந்து காட்டை விட்டு வெளியே வருகிறான். உணவின் தேவைகளுக்காக தான் நீரின் ஓரத்தில் தங்களின் இனம் தங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறான். அந்த இடத்தில் இருந்து தான் மனிதனின் பரிமாண வளர்ச்சி ஆரம்பம் ஆகிறது. அதுவரை கிடைத்தவற்றை மட்டுமே உணவின் தேவைக்காக பயன்படுத்தி வந்தவன் அதனை உற்பத்தி பண்ணும் நிலைக்கு செல்கிறான்.
இதற்கு முன்பு கூறியது போல காட்டில் வாழ்ந்த நம் இனம் பயமில்லாமல் திரிந்தாலும் அவன் பயந்த ஒன்று இந்த இயற்கையை மட்டும் தான். அதனால் தான் அதற்கு எந்த வித தீங்கும் விளைவிக்க கூடாது என்பதில் அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தார்கள்.
பரிமாண வளர்ச்சியில் மனிதனுக்கு எவ்வளவு அறிவு வளர்ச்சி இருந்தாலும் அவன் அடிப்படையில் ஒரு காட்டு வாசி தான் என்பதை அவனின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கு பின்னாடியும் இருக்கும்.
காட்டில் வாழ்ந்த மனிதன் உணவின் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடியவன் ஒரு போதும் மாமிச விலங்குகளை சீண்டியது இல்லை அதே போல யானைகளையும் தான். யானைகளை ஏன் அவன் வேட்டையாடவில்லை என்பதற்கு கடந்த பகுதியில் விளக்கம் தந்து இருப்பேன். இதில் கொடிய உயிர் கொல்லி விலங்குகளின் பக்கம் இவர்கள் திரும்பியது இல்லை காரணம் தங்களின் உயிர் போய்விடும் என்ற பயமே அதற்கு காரணம். அதனால் தான் இன்றும் இக்கால மனிதர்கள் அந்த கொடிய விலங்குகளை தான் தன்னை காப்பாற்றி கொள்ள படைத்த இறைவனின் வாகனங்களாக உருவம் கொடுத்து இருக்கிறார்கள். எங்கேயும் அவன் வேட்டையாடி தின்ற விலங்குகளுக்கு இது போல அவன் உருவகம் படுத்தியது இல்லை. இதிலிருந்து ஆதிமனிதனின் சாயல் தற்போது உள்ள மனிதர்களிடம் கூட வெளிப்பட்டு தான் வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.
வரும் அடுத்த தொகுப்பில் மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு பின்னாடி இருக்கும் இயற்கையின் வீழ்ச்சி, இயற்கை வழிபாடு குறித்த ஒரு பார்வை பற்றியும் பார்க்கலாம்...